Advertisemen
தேவையான பாகங்கள்
- T1 548 - 1
- T2 558 - 1
- T3 SL100B - 1
- R1 470 ஓம்ஸ் - 1
- R2 33K - 1
- R3 470 ஓம்ஸ் - 1
- R4 560 ஓம்ஸ் - 1
- R5 47 K - 1
- R6 2.2 K - 1
- R7 470 ஓம்ஸ் - 1
- R8 470 ஓம்ஸ் - 1
- C1 10 MFD 6V - 1
- 0.04 MFD - 1
- 0.01 MFD - 1
- T1 தெர்மிஸ்டர் - 1
- ஸ்பீக்கர் 8 ஓம்ஸ் - 1
- ஐசி - NE 555 - 1
- பிசிபி போர்டு
- 6 வேல்ட் பேட்டரி
- LED - 1
தீ-யை கண்டறிந்து எச்சரிக்கும் ஃபையர் அலாரம் சர்க்கீயூட்டை பயன்படுத்தி வீடுகளிலும், அலுவலங்களிலும் மற்றும் கடைளிலும் ஏற்படும் தீ ஆபாயத்தை, இதில் பொருத்தியுள்ள சென்சார்கள் கண்டறிந்து நமக்கு எச்சரிக்கை ஒலியை எழுப்பும். மிக எளிமையான முறையில் இதனை வடிவமைக்கலாம்.
ஃபையர் அலாரம் சர்க்கீயூட்டில் தெர்மிஸ்டர் என்றழைக்கப்படும் சென்சார் பயன்படுத்தப் பட்டுள்ளது. இந்த சென்சாரானது உச்ச வெப்ப நிலையில் குறைவான ரெசிஸ்டன்ஸ்யையும் குறைவான வெப்ப நிலையில் அதிகமான ரெசிஸ்டன்ஸ் ஆற்றலையும் வெளியிடும்.
இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஐசி (NE 555) ஆனது எப்போது எச்சரிக்கை சமிக்கையை தெர்மிஸ்டர் சென்சாரில் இருந்து பெருகிறதோ அப்போது எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது. சென்சார் உச்ச வெப்ப நிலையை அடையும் போது அதன் ரெசிஸ்டன்ஸ் அளவு குறைந்து தன்வழியே நேர்முனை மின்சாரத்தை(+6V) டையோடு D1 வழியே ரெசிஸ்டர் R2 மற்றும் கெபாசிட்டர் C1-க்கு கடத்துகிறது. C1 முழுவதும் சார்ஜ் ஆக சிறிது கால அவக்காசத்தை எடுத்தும் கொள்ளும் பின் நேர் முனை மின்னேட்டத்தை ட்ரான்ஸ்சிஸ்டர் T1 பேஸ் கம்பிக்கு அனுப்புகிறது. C1 மதிப்பினை மாற்றி அமைப்பதன் மூலம் அலாரம் செயல்பட ஆரம்பிக்கும் நேரத்தை மாற்றி அமைக்க முடியும்.
டிரான்சிஸ்டர் T1 கலெக்கடர் கம்பியை T2 வின் பேஸ் கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது. டிரான்சிஸ்டர் T2 நேர்மின் முனையை (+) ஐசி பின் 4-கிற்க்கு அனுப்பிவைக்கிறது. ரெசிஸ்டர் R4, டிரான்சிஸ்டர் T1 னில் நேர்மின்னோட்டம் இல்லாத போது அதாவது எந்தவிதமான தீ விபத்தும் ஏற்படாமல் இருக்கும் போது ஐசி 555 செயல்படாமல் இருக்க பின் 4 உடன் இணைக்கப் பட்டுள்ளது. தீ விபத்து ஏற்படும் போது சென்சார் வழியாக சமிக்கைகள் அனுப்பப்படும் போது ஐசி பின் 3 கம்பி T3 பேஸ் கம்பியுடன் இணைக்கப்பட்டுள்ளது இது குறைவான அலுத்தமுள்ள அலைகளை ஆம்பிலிபை செய்து ஒலி பொருக்கிக்கு அனுப்பி ஒலிர செய்கிறது.
LED1 சர்க்கீயூட் செயல் பாட்டில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள பொருத்தப்பட்டுள்ளது. 6 வேல்ட் பேட்டரி மின்சாரம் ஃபையர் அலாரம் சர்க்கீயூட்டை இயக்க போதுமானதாகும்.
theeyai kadanpidikkum circuit in tamil, tamil studen projects tamil electronics circuits neruppu kandupidikka, elecronic circuit seivathu eppadi, fair alaram circuit seivathu eppadi, fire alarm circuit in tamil
Advertisemen