பொய் சொல்பவர்களை கண்டறியும் லை டிடெக்டர் சர்க்கீயூட் - Poi solpavarai kandarium karuvi lie detector

Advertisemen
 

எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,

தேவையான பாகங்கள்

 டிரன்ஸ்சிஸ்டர்கள் 
  1. T1 - BC548
  2. T2 - BC548
  3. T3 - BC548  
 கெபாசிட்டர்
  1. C1 - 0.01 MF
ரெசிஸ்டர்கள்
  1. R1 - 1M
  2. R2 - 1M
  3. R3 - 10K
  4. R4 - 470 ஓம்ஸ்
  5. R5 - 47K
  6. VR1 - 100K வேரியபுல் ரெசிஸ்டர்
  1. போட்டரி (மின்கலன்) 9V -1
  2. சுவிட்ச் - 1
  3. சிகப்பு நிற எல்.இ.டி - 1
  4. பச்சை நிற எல்.இ.டி - 1

இந்த சர்கீயூட்டை பயன் படுத்தி ஒரு மனிதன் உண்மை கூறுகிறாரா அல்லது பொய் சொல்கிறாரா என்பதை தீர்மானிக்க உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து நமக்கு தெரிய படுத்துகிறது. இந்த ஆய்வு தோளின் தன்மையை அடிப்படையாக கொண்டு செய்யபடுகிறது.
எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,
ஒரு சராசரியான மனிதனின் தோள் இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. வரண்ட சருமம், ஈரப்பதமான சருமம். வரண்ட சருமம் உள்ள வரின் ரெசிஸ்டன்ஸ் ஆற்றல் 1 மில்லியன் ஓம்ஸ் ஆகும், ஈரப்பதமான சருமம் உள்ளவரின் ரெசிஸ்டன்ஸ் ஆற்றலானது சற்று குறைந்து காணப்படலாம். இந்த கருவிகளை சில துறைகளில் மட்டும் குற்றவாளிகளிடம் விசாரனையின் போது பயன்படுத்தப் படுகிறது. ஆனால் இதனை வைத்து 100 சதவிகிதம் தீர்மானித்து கூறிவிட முடியாது வருமன் காலங்களில் இந்த சர்க்கீயூட்டை மேலும் செம்மை படுத்தினால் மட்டுமே முடியும்.

இந்த லை டிடக்டர் சர்கீயூட்டில் என்ன பயன்படுத்தப் பட்டுள்ளது?

மூன்று டிரன்ஸ்சிஸ்டர்கள் (T1, T2, T3) ஒரு கெபாசிட்டர், இரண்டு LED கள், (L1 பச்சை நிற LED, L2 சிகப்பு நிற LED ), 5 ரெசிஸ்டர்கள்(R1 முதல் R5) மற்றும் ஒரு வேரியபுல் ரெசிஸ்டர் (VR1). லை டிடெக்டர் விசாரனையின் போது வியர்வையினால் தோளின் ரெசிஸ்டன்ஸ் அளவு மாறுபடுவை பொருத்து பொய் மற்றும் உண்மையை தீர்மானிக்கிறது.

ரெசிஸ்டர் R1 மற்றும் R2 மின் கடத்தியாக செயல் படுகிறது. இரண்டு ரெசிஸ்டர்களும் 1 மெக் ஓம்ஸ் அளவுடையவை. மேல் உள்ள ஒயர் போட்டரியின் வேல்ட்டேஜில் பாதி அளவினை கொண்டிருக்கும் ஏன்னெனில் இரண்டு ரெசிஸ்டர்களின் மதிப்பு சமமாக இருப்பதால். ஒருவர் மேல் உள்ள ஒயரை கையில் பிடிக்கும் போது இதன் மின் அளவில் அவருடைய சருமத்தின் தன்மையை பொருத்து மற்றம் ஏற்படுகிறது. சருமத்தின் ரெசிஸ்டன்ஸவுடன் R2 இணையாக் இருக்கின்றது. அல்லது மின் அளவில் சற்று முன் பின் மாற்றம் இருக்கலாம். சருமத்தின் ரெசிஸ்டன்ஸ் குறையும் போது ஒயரின் (சென்சார்) மின்னோட்டத்தில் மாற்றம் இருக்கும்.
கெபாசிட்டர் C1 தேவையற்ற 50hz அலைகளை நீக்கி ஒரு மென்மையான மேம்பட்ட சிக்னலை பெற பயன்படுகிறது. பிறகு டிரன்ஸ்சிஸ்டர்கள் பெறப்பட்ட சிக்னலை மின் அளவை ஒப்பிட்டு மீண்டு ஆம்பிலிபை செய்து LED யை ஒளிர செய்கிறது. பரிசோதனை செய்வதற்க்கு முன் ஒயரை கையில் பொருத்திய பின் வேரியபுல் ரெசிஸ்டரை முன் பின் திருகி பச்சை நிற LED தெளிவாக ஒளிரும் படி அமைக்கவும்.
எலெக்ட்ரானிக்ஸ் சர்க்கீயூட்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சர்கீயூட்ஸ், எலெக்ரானிக்ஸ் சர்கீயூட்,
உண்மைய பேசும் போது L1 பச்சை நிற LED தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டே இருக்கும் அதே சமயம் பொய் பேசும் போது உடலின் இரத்த ஓட்டத்தில் மாறுதல் ஏற்பட்டு இரத்த குழாய்கள் சுருங்கி விரிகின்றது. இதனால் உடல் வெப்ப நிலை அதிகரித்து வியர்வை துளிகளை வெளியேற்றுகின்றது ஒயரின் மின்னேட்டத்தில் மறுதல் ஏற்ப்பட்டு L2 சிகப்பு நிற LED ஒளிருகிறது. இதனை அடிப்படையாக கொண்டு சர்க்கீயூட் உண்மை மற்றும் பொய்யை கண்டறிகின்றது.

தமிழ் எலெக்ட்ரானிக்ஸ் புரஜெக்ட், எலெக்ட்ரானிக்ஸ் புரஜெக்ட் தமிழ், லை டிடெக்டர் புரஜெக்ட், electronic projects in tamil, electronic circuit in tamil, tamil vali electronics circuit, free electronic circuit in tamil, lie detector circuit in tamil.



Advertisemen

Disclaimer: Gambar, artikel ataupun video yang ada di web ini terkadang berasal dari berbagai sumber media lain. Hak Cipta sepenuhnya dipegang oleh sumber tersebut. Jika ada masalah terkait hal ini, Anda dapat menghubungi kami disini.
Related Posts
Disqus Comments