Advertisemen
![]() |
வீட்டு கதவின் அதிர்வை கண்டறியும் பாதுகாப்பு கருவி வரைபடம் |
தேவையான பாகங்கள்
1. 5v 12v பேட்டரி - 1
ரெசிஸ்டர்கள்
- 2.2M - 1
- 270 k - 1
- 3.3 k - 1
- 10 k - 3
- 100k - 1(வேரியாபுல் ரெசிஸ்டர் )
- 470 - 1 (ஓம்ஸ்)
- 1k -1
கெப்பாசிட்டர்
- 1nf -1
- 0.1MF -2
- 100 MF/25v -2
Ic's
- NE555 -1
- UM66 - 1
- BC 549 -1
- BC 547 -1
மற்றவைகள்
- டாட்டெட் பிசிபீ - 1
- ஸ்பீக்கர் - 1
- பீசோ சென்சார் -1
- 3.1v ஜீனர் டையோடு -1
செயல்படும் விதம்.
இந்த சர்க்கீயூட்டை பயன்படுத்தி கதவின் வெளிப்புறத்தில் மென்மையாக தட்டும் பொழுதோ அல்லது பூட்டை உடைக்க முயற்ச்சி செய்யும் போது எற்படும் அதிர்வினை கண்டறிந்து எச்சரிக்கை ஒளி எழுப்பும் படி வடிவமைக்கப் பட்டுள்ளது.
IC1 NE555 மோனஸ்டேபுள் முக்கிய சர்கீயூட்டாக செயல்படுகிறது அதாவது பின்2-க்கு மின் அலைகள் கிடைக்கும் போது பின்3 மின் அலைகள் வெளியிடும். பீசோ சென்சார் அதிர்வுகளை கண்டறிந்து அனுப்பும் மின் அலைகள் ட்ரான்சிஸ்டர் T1 ஆம்பிலிபை செய்து NE555 பின்2-விற்க்கு அனுப்புகிறது பின்3-யில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டும் மின் அலைகள் IC2 UM66 மியூசிக் ஜெனரெட்டர்க்கு அனுப்பி LS1 ஒலிரச் செய்கிறது. T2 டிரன்சிஸ்டர் IC2 வெளியிடும் இசையை பன்மடங்காக பெருக்கி ஒலி பெருக்கிக்கு அனுப்புகிறது. VR1 ரெசிஸ்டரை முன் பின் திருகுவதன் மூலம் ஒலி பெருக்கி ஒலிரும் காலநேரத்தை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும். அதாவது பீசோ சென்சார் ஒரு அதிர்வை கண்டறிந்து அனுப்பும் ஒரு மின் அலைக்கு 2 செகண்ட் முதல் 40 செகண்ட் வரை ஒலியை கேட்க முடியும். தொடர்ந்து அதிர்வுகளை கண்டறிந்தால் இசையை தொடர்ந்து வெளியிடும்.
சர்கீயூட் இயங்கு வதற்கு 5v முதல் 12v பேட்டரியை பயன்படுத்தலம்.
Advertisemen